செய்தி நிறுவனங்களையும் உலுக்கி எடுக்கும் கொரோனா

லன்டன்: கொரோனா வைரஸ் தொற்றால், செய்தி நிறுவனங்களும், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளன.


தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் உள்ள சி.என்.என்., அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அலுவலகத்தை பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளித்துச் சுத்தப்படுத்தவுள்ளனர். இதற்காக, குறைந்தது அடுத்த 24 மணி நேரத்திற்கு, சி.என்.என்., தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.