சென்செக்ஸ் 1700 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை : கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து தள்ளாட்டம் என்ற நிலையிலேயே உள்ளது. இன்றைய (மார்ச் 18) வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1709 புள்ளிகளும், நிப்டி 498 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன.

உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் வர்த்தக துவக்கத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமானது. இருப்பினும் கொரோனா அச்சத்தால் இந்தியாவில் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிய பங்குச்சந்தைகள் சரிந்தது, ரூபாயின் மதிப்பு சரிந்தது, வங்கி சார்ந்த பங்குககள் அதிகம் சரிந்தது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் மீண்டும் சரிவு பாதைக்கு திரும்பின.